புகையிரத போக்குவரத்து சேவையாளர்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கனிப்பு கைவிடப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பை புகையிரத போக்குவரத்து சேவையாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புiயிரத தொழிலாளர் ஒன்றியம் தெரிவித்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் புகையிரதங்களை தரிப்பிடங்களில் இருந்து அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

July 6, 2022, 8:49 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X