நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் கடந்ததினம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டாலும் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடத்தி வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முடிந்தால் நிராகரிக்கப்பட்ட சேதன பசளைக்கு பதிலாக யூரியா பசளை கப்பல் ஒன்றை வழங்க முடியுமா என வினவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய கடன் வசதி திட்டத்தின் கீழ் 65 ஆயிரம் மெற்றிக் தொன் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமானில் இருந்து இந்த கப்பல் எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டிற்கு பிரவேசிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த கப்பல் இரண்டு நாட்கள் தாமதித்தே நாட்டை வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

June 28, 2022, 7:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X