ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள புதிய பயணம் போலியானது  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் வேறு சிலர் இருக்கிறார்களா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு சுதந்திரக் கட்சி முன்மொழிந்த போதிலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின், சர்வதேசத்தின் ஆதரவும் உதவிகளும் இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

October 10, 2022, 12:27 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X