இந்த ஆண்டின் தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் இயக்கத்தில் #LycaProductions  தயாரிப்பில் ஏ ஆர் ரகுமானின் இசையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாக உள்ளது.

நாம் அறிந்த கதையில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்கள் எவ்வாறான முறையில் இந்தத் திரைப்படத்தில் அந்தக் கதாபாத்திரங்களின் சித்தரிக்க போகிறார்கள்???

 

👉வந்தியத்தேவன்

புதிய ஊர் செல்பவர்களுக்கு முதலில் அறிமுகமாகும் நபரிடம் மிகுந்த நெருக்கம் உண்டாகும். கல்கியின் இந்த கனவுலுகத்துள் நம்மை அழைத்து செல்லும் வந்தியத்தேவன் அவ்வாறே எனக்கு.

கதை நாயகன் என்னவோ ராஜராஜ சோழன் தான். ஆனால் கல்கியே ஒரு கட்டத்தில் நம் நாயகன் வந்தியத்தேவன் என்று குறிப்பிடுகிறார். படைத்தவன் மனம் கவர்ந்தவன் படித்தவனின் மனதையும் கவர்வதில் ஆச்சரியமில்லையே. நண்பனுக்காக ஒரு கடும் பணியை எடுத்து கொண்டது, ஒரு தேர்ந்த உளவாளி போல் அபாயம் என்பதை அபயம் என்று மாற்றி விளையாடியது. காணும் பெண்களிடமெல்லாம் மனதை பறிகொடுத்து கனவுலகில் சஞ்சரித்தது.

👉பூங்குழலி கதாபாத்திரம் ..

என்ன சுயேச்சயான பெண் அவள்.

தன் காதலுக்கும் , ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்தவள்.

அவளை வந்தியத்தேவன் குறும்புக்காரர்க்கும் பிடிக்கும்.. அருள்மொழி போன்ற இளவரசருக்கும் பிடிக்கும். சேந்தன்அமுதன் போன்ற பக்திமானுக்கும் பிடிக்கும்.

👉மணிமேகலை

தன் காதலுக்காக எதையும் செய்யும் பெண்..

பொன்னியின் செல்வன் எத்தனை முறை படித்தாலும் மணிமேகலை உயிர் பிரியும் நேரம் கண்களில் நீரை வர வைக்கும்.

👉நந்தினி , குந்தவை ,

நந்தினி வீரபாண்டியனை கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.

👉குந்தவை

சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாக வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள். இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கையில் குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது. பராந்தக சுந்தரசோழா் செம்பியன் மாதேவி அநிருத்தா் அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோா் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவாின் அன்பையும் பெற்றவள்

இந்த இருவரையும் கல்கி அவர்கள் ஒப்பிடும் போது

ஓருவன் நரகத்தில் விழ போகின்றாவனாய் இருந்தால் அவனை தடுத்து நிறுத்தி அவனை சொர்கத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவாளாம் குந்தவை தேவி

அதே நேரத்தில் நந்தினி

நரகத்தையே சொர்கம் என்று சொல்லி சாதித்து நம்பும் படிசெய்து அவனை சந்தோசமாக நரகத்தில் குதிக்கும்படி செய்துவிடுவாளாம் நந்தினி தேவி😍😍😇

September 8, 2022, 12:51 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X