பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகித்த மாணவர் உட்பட 04 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஹொரணை – மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஊடாகவே ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்காக, சந்தேகநபரான பாடசாலை மாணவருக்கு அவரது தாயார் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

X