வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகிறது.

ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி 1000 ரூபாய் நாணயத் தாள்களைவ ழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூரடியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 02 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 03 கடைகளில் வழங்கிய 03 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 10, 2022, 11:01 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X