இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இதன்காரணமாகவே  மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றமை அதிகரித்துள்ளதோடு தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் முத்துராஜவலை எரிபொருள் முனையத்தில் இருந்து டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதோடு பெற்றோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

August 29, 2022, 2:58 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X