மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்திருந்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பிலான கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த கோரிக்கையினை ஏற்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 6 வருடங்களுக்கு அவரது பதவி காலத்தை நீடித்துள்ளார்.

 

June 30, 2022, 7:22 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X