40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளது . இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு சொந்தமான கடைசி எரிபொருள் கப்பல் இதுவென தெரிவிக்கப்படுகிறது .

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் , எரிபொருள் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளதுடன் , பல பகுதிகளில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர் .

இதன்படி விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது . மேலும் நாளாந்த எரிபொருள் விநியோக முறையை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

June 16, 2022, 7:16 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X