ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவி ஒருவரை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகளை ஆசிரியர் தொடர்ந்தும் தாக்கியதாக குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறுமி தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் சிறுமியின் வகுப்பாசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

November 11, 2022, 9:54 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X