உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் நடந்தது. அதன் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைய இருந்தது. ஆனால் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தின் படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

September 5, 2022, 11:15 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X