முன்னால் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமா நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கம்மன்பில சார்பில் ஆஜரான சட்டத்தரணி இனோகா பெரேரா, தனது கட்சிக்காரர் புனித யாத்திரைக்காக இந்தியா செல்ல விரும்புவதாகவும், தற்போதைய பயணத்தடையை இம்மாதம் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நீக்குமாறும் நீதிமன்றில் கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை உரிய காலத்திற்குள் நீக்குமாறு உத்தரவிட்டது.

November 21, 2022, 2:19 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X