முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல் முரண்பாடுகள் உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர் நாடு திரும்புவதற்கு இது சரியான நேரம் இல்லையென நினைக்கிறேன், அவர் விரைவில் திரும்பி வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை,” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் வகையில், இலங்கை அதிகாரிகள் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

August 1, 2022, 12:54 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X