கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் நேற்று உயிரிழந்துள்ளதுடன், 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 664,975 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணியா வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

July 26, 2022, 10:48 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X