மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக் தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

October 17, 2022, 10:58 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X