யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரொருவர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியாலை தபால்கட்டைச் சந்தியில் நேற்று மதிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்தவரை குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

November 12, 2022, 8:22 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X