யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் தலைவர்கள் யுக்ரைனுக்கு தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த யுத்தத்தில் யுக்ரேன் வெல்வது உறுதி என்ற போதிலும், ஜி7 நாடுகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே இலகுவான வெற்றியினை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

7 செல்வந்த நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே; பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியா மேலும் 52 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்களை யுக்ரைனுக்கு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

June 27, 2022, 7:18 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X