அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியுள்ளார் .

வனிந்து ஹசரங்கவின் உடல்நிலை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவின் பிரதானி பேராசிரியர் அர்ஜுன் டி சில்வாவிடம் வினவியபோது வனிந்துவின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை தொடர்பில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . அத்துடன் , இன்றைய் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து தற்போது கூறமுடியாது என்றும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார் .

June 16, 2022, 7:31 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X