போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில் அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் போதைப் பொருள் பாவனை காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த காலத்தில் “வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

ஆனால் கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டமையால் தற்போது மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

October 24, 2022, 11:53 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X