வறிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிப் புத்தகங்களை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கான பணத்தை ஒதுக்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்தியாவில் இருந்து மை மற்றும் காகிதத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப தரங்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

August 2, 2022, 10:43 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X