கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 222 வது கிலோ மீற்றர் பகுதியில் நேற்று மாலை 06 மணி அளவில் வேனுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் நகரில் உள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற 21 வயதுடைய சாள்ஸ் வினேத் என்ற ஊழியர் பணிமுடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

November 18, 2022, 6:43 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X