பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது இதனால் எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடதாசி  தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சி புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல வகையான பயிற்சிப் புத்தகங்களின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிப் புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை என்றும், புதிதாக கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட  புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

விலைவாசி உயர்வு, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக  பயிற்சி புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் பல புத்தக வெளியீட்டாளர்கள் காகித பற்றாக்குறையால் புதிய புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திவிட்டனர்.

June 11, 2022, 7:35 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X