விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடிக்கும் கத்தி சண்டை படம் தொடங்கியது

00
Kathi Sandai Film-19 TamilFM

விஷாலின் கத்தி சண்டை திரைப்படத்தின் தொடக்க விழா இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக “ கத்திசண்டை “ படத்தையும் தயாரிக்க உள்ளார்.

நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக தமன்னா முதல் முறையாக விஷால் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் ஜெகபதி பாபு வில்லன் வேடம் ஏற்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்
இசை – ஹிப்ஹாப் தமிழா
கலை – உமேஷ்
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்

இப்படத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய விஷால்,
எனக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் படம் இது. ஒன்பது வருடங்களுக்கு முன்பு திமிரு படத்தில் இணைந்து நானும் வடிவேலுவும் வெற்றிபெற்றோம்.

இந்த படத்தில் மீண்டும் இணைகிறோம். அவரது காமெடியை நானும் ஒரு ரசிகனாக கண்டுகளிக்க காத்துக்கொண்டிருகிறேன் என்றார்.

Kathi Sandai Film-6 TamilFM

Kathi Sandai Film-1 TamilFM

Kathi Sandai Film-12 TamilFM

Kathi Sandai Film-2 TamilFM

Kathi Sandai Film-5 TamilFM

Kathi Sandai Film-7 TamilFM

Kathi Sandai Film-17 TamilFM

Kathi Sandai Film-18 TamilFM

Kathi Sandai Film-13 TamilFM

 

 

 

 

 

 

 

0 thoughts on “விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடிக்கும் கத்தி சண்டை படம் தொடங்கியது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us