மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை – வெல்லாவெளி பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பாலையடிவட்டையில் இருந்து சென்ற போது அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருச்செல்வம் திவிகரன் என்பவரே உயிரிழந்துள்ளார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

August 29, 2022, 3:02 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X