நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார் .

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை அறிவித்துள்ளார் . 20 % தனியார் பஸ்கள்  இன்று மற்றும் நாளை நாடு முழுவதும் இயங்கும் எனவும் கையிலுள்ள எரிபொருளைக் கொண்டு பஸ்களின் எண்ணிக்கை 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர் ,  வெள்ளியன்று பஸ் சேவையை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்தார் .

June 15, 2022, 7:29 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X