அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளப்பாதுகாப்பு வீதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரசிய தகவலுக்கு அமைய, உப பொலிஸ் பரிசோதகர் பகிதரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு சென்று சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் குறித்த நபர் 20 மில்லிகிராம் ஹெரோயினை 1000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதுடன், அவரது உடமையிலிருந்து 240 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

November 16, 2022, 6:50 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X