ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் திருடினாலோ அவற்றுக்கு சேதம் விளைவித்தாலோஇ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதன் பின்னரான நிலை என்பவற்றால்இ கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

இதற்கமையஇ அங்குள்ள தொல்லியல் மதிப்புமிக்க சின்னங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைஇ ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முதலான இடங்கள் இன்றைய தினம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பும்இ கடமையுமாகும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

July 13, 2022, 10:31 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X