2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் தங்களது விண்ணப்பங்களை இன்று (01) முதல் ஒன்லைனில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் L. M. D. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்ப படிவங்களை குறித்த காலப்பகுதியில் சமர்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, 2021ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக தோற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பின் இப்பரீட்சையின் (2021) பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

August 1, 2022, 7:26 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X