நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

தினமும் 4 முதல் 5 கொரோனா மரணங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

July 29, 2022, 5:34 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X