சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று பிற்பகல் முதல் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் இன்மையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , போதுமான அளவு எரிபொருள் இன்மையால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வீதியில் வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கின்றது

இதேவேளை இன்றைய நாளிலும் மட்டுப்படுத்தப்பட்டளவில் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் இன்றும் முழுமையான கொள்ளளவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

June 24, 2022, 9:30 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X