பாடசாலை மாணவர்கள் பலர் உணவின்றி அல்லல் படுகின்றனர்.காலை உணவை உண்ணாமல் பாடசாலைகளில் மயங்கி விழும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன என இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உதாரணமாக அனுராதாபுர மாவட்டத்தில் திம்புலாவ உட்பட மூன்று பாடசாலைகளில் 20 மாணவர்கள் நேற்று உணவின்றி மயங்கி வீழ்ந்துள்ளனர்.

இது பற்றி உங்களுக்கு தெரியுமா? இது தவிர கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பகுதியில் மதிய நேர உணவுக்காக மாணவர் ஒருவர் இளநீரை கொண்டு சென்றுள்ளார்.

இப்படி பல சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.ஆகவே எதிர்கால சந்ததியினர் ஊட்டச் சத்து இன்றி தவிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

September 22, 2022, 6:15 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X