பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி முதற்கோலாசான்களாகவும், கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் திஸகுட்டி ஆரச்சி ஆகியோர் உதவி முதற்கோலாசான்களாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து உரிய நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும்கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சி முதற்கோலாசானின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் சபை முதல்வரின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

July 28, 2022, 7:09 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X