சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.அன்றாடம் பயன்படுத்தப்படும் *சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக* சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 வாரங்களுக்கு முன்னர் *135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா* என அறிவிக்கப்பட்டுள்ளது.

*கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவு உட்கொள்ளும் உடனடி நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது.முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை* குறிப்பிடத்தக்கது.

June 23, 2022, 9:44 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X