சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிய 4 சந்தேகநபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் நகரில் உள்ள அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி குறித்த தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன. இவற்றின் பெறுமதி 3 கோடியே 54 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார்; முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய,சுமார் 6 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் பெண் ஒருவரும் 3 ஆண்களுமாக 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

July 1, 2022, 9:57 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X