2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 44 பரீட்சை மையங்களில், 24 ஆயிரத்து 950 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

பரீட்சைக் கடமைகளில் ஆயிரத்து 540 பணிக்குழாமினர் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களின் சொந்த முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதியட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம், அதனைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.;

June 29, 2022, 7:17 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X