தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை.நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது. வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் – ஜனாதிபதி

2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட உரை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டத்தை தற்போது பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

November 14, 2022, 1:41 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X