அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தச் சட்ட வரைபு இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரைவு பல தடவைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பல தடவைகள் சந்தித்து 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்படி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை கொழும்பில் அமைச்சரவை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

June 20, 2022, 7:46 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X