21 ஆம் திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்தல், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் மேற்பார்வை குழுக்களை ஸ்தாபித்தல், மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு பாராப்படுத்தல் போன்றன அதில் உள்ளடங்குகின்றன.

மேலும் 21வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்து;ளளார்.

முன்னதாக பல தடவைகள் குறித்த திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

June 21, 2022, 7:21 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X