அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றத்தில்; சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

June 30, 2022, 9:37 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X