எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்களுடனும் ஊடக பணிப்பாளர்களுடனும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 11ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலும் 5ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கும்; குறைவான பெற்றோலுமே தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், மீண்டும் 38ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சு.ர்.ஆ சமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 35ஆயிரத்து 300 மெற்றிக் தொன்; பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

June 30, 2022, 7:16 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X