இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 300 கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை நிதி அமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

வாசனை திரவியங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் , காலணிகள், வெண்ணெய், பால், சொக்லேட், கிரீம், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள், கைப்பைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், கத்திகள், கத்தரிக்கோல் மற்றும் பல பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நேற்று முன் அனுப்பப்பட்ட மற்றும் செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்து.

August 24, 2022, 12:25 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X