ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படையினர் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதாகத் தோன்றினாலும், பின்னர் அவர்கள் “பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்” என்று AFP செய்தி முகவரகத்தினரிடம் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பாடல் பாடி, நடனமாடி, மேசைகளில் படுத்திருந்த போராட்டக்காரர்களை கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல் காதிமி, அழைப்பு விடுத்தார்.

மதபோதகர் முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள், பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு நாட்டில் ஏற்பட்ட ஊழல் மற்றும் வேலை வாய்ப்பின்மை தொடர்பாக பெரும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

July 28, 2022, 11:58 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X