எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் முன்னதாக 19ஆம் திகதி அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அன்றைய தினம் தேசிய துக்க நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே, அன்றையதினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

September 15, 2022, 3:35 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X