சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச்செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டிற்கு தற்போது வருகை தந்துள்ள இலங்கைக்கான கடன்களை மறுசீரமைப்பதற்கான நிதி, சட்ட ஆலோசனை நிறுவனங்களான டுயணயசன மற்றும் ஊடகைகழசன ஊhயnஉந ஆகியவற்றின் பிரதிநிதிகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

June 20, 2022, 7:53 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X