இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று 1.07 மணிக்கு, 6.2 ரிச்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

ஜாவா மாகாணத்தின் ஜெம்பர் ரீஜென்சிக்கு தென்மேற்கு 284 கி.மீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சுனாமிக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் கடந்த நவ. 21ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஐ எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X