வாகரை பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 25 முதல் 50 வயதுடைய வாகரை கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாகரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

November 23, 2022, 11:44 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X