இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.

தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்களில் படிப்படியான முன்னேற்றம், சுற்றுலாத்துறையின் மீளெழுச்சி ஆகியவற்றுடன், உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் அதிகப்படியான அழுத்தங்களை குறைக்கும் அதேவேளையில் சமீபத்திய மாதங்களில் வெளிப்புற நடப்புக் கணக்கு இருப்பை மேம்படுத்த உதவியுள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியள்ளது.

இதன் விளைவாக, மாற்று விகிதம் ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது எனவும், 2023 தொடக்கத்தில் இருந்து இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் கணிசமான மதிப்பை பதிவு செய்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதில் சீனாவின் மக்கள் வங்கியின் சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியும் அடங்கும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

X