மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான தனிப்பட்ட முறைப்பாட்டு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார்.

இதன்போது, அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த இயலாது என முதற்கட்ட ஆட்சேபனை தெரிவித்தனர்.

முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை டிசம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

தென்மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனே அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை சமர்ப்பித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக அஜித் நிவார்ட் கப்ரால் மீது தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

November 24, 2022, 11:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X