நாட்டின் பல பகுதிகளில் இன்று பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது .

அத்துடன் , காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது .

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் .

இதனால் , மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

November 24, 2022, 8:26 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X