ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாராளுமள்றில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஆவது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கொழும்பில் முஜிபுர் ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றவர் ஏ.எச்.எம். பௌசி ஆவார்.

Leave a Reply

X